Skip to main content

நேபாள கிரிக்கெட்டுக்கு அசிங்கம்.. சந்தீப் லாமிச்சானே குற்றவாளி என அறிவிப்பு!

Dec 30, 2023 32 views Posted By : YarlSri TV
Image

நேபாள கிரிக்கெட்டுக்கு அசிங்கம்.. சந்தீப் லாமிச்சானே குற்றவாளி என அறிவிப்பு! 

நேபாள அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சந்தீப் லாமிச்சானே பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



 அண்மையில் ஆசிய கோப்பை தொடரில் நேபாள அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. நேபாள அணி வீரர்கள் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலை அளிக்கவில்லை என்றாலும், சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியை போல் விரைவில் நேபாள அணியும் எழுச்சிபெறும் என்று இந்திய ரசிகர்கள் பலரும் பாராட்டினர்.



 புஜாராவுக்கு சரியான மாற்று வீரர் யார்? அந்த 2 வீரர்களையும் தேர்வு செய்யாதது ஏன்? ஹர்பஜன் சிங் கேள்வி இந்த நிலையில் நேபாள கிரிக்கெட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் அந்த அணியின் சந்தீப் லாமிச்சானே ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.



23 வயதாகும் நேபாள அணியின் முன்னாள் கேப்டனான சந்தீப் லாமிச்சானே இதுவரை 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளையும், 52 டி20 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 2018ஆம் ஆண்டு விளையாடிய சந்தீப் லாமிச்சானே 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.



 இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் நேபாள வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு சந்தீப் லாமிச்சானே காத்மாண்டுவில் உள்ள ஹோட்டலில் வைத்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் எழுந்த போது, அவர் வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.



 அதன்பின் உடனடியாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அதன்பின் கைது செய்யப்பட்ட அவர், சில மாதங்களுக்கு பின் ஜாமீனில் வெளிவந்தார். அதேபோல் நேபாள அணியில் விளையாடவும் அந்ந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு வழங்கியது.  



இந்த நிலையில் காத்மாண்டு நீதிமன்றத்தில் நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் விசாரணை முடிவில், சந்தீப் லாமிச்சானே பாலியல் வன்கொடுமை செய்ததாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், 18 வயதிற்கு அதிகமானவர் என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கான தண்டனை விவரங்கள் ஜனவரி மாதம் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

7 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை