Skip to main content

நடிகரும்,தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் காலமானார்.!

Dec 28, 2023 36 views Posted By : YarlSri TV
Image

நடிகரும்,தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் காலமானார்.! 

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. முன்னதாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டது.



தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் காலை உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் ஆம்புலன்சில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.



சென்னையில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்த் வீட்டின் முன்பு தொண்டர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை