சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா..!
Dec 27, 2023 41 views Posted By : YarlSri TV
சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா..!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக லேடி சூப்பர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். மலையாள படமான மனசினகரே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா அதன் பின்னர் தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானார்.
அதன் பின்னர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியான அவர் அதன் பின்னர் முன்னணி நடிகையாகி முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடித்தார். அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கி புகழ் வெளிச்சத்தில் இருந்த நயன்தாராவுக்கு வெற்றிப் படங்களும் தொடர்ந்து அமைந்தன.
மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். சமீபத்தில் அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி ரிலீஸானது. இப்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago