Skip to main content

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

May 05, 2024 59 views Posted By : YarlSri TV
Image

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது! 

கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ-வுமான ஹெச்.டி.ரேவண்ணா கைது…



முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவருமான தேவகௌடாவின் மகன் ஹெச்.டி. ரேவண்ணா. கர்நாடகாவின் ஹோலேநரசிபூர் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ-வாக உள்ளார். இவர் அக்கட்சியின் தலைவரான ஹெச்.டி. குமாரசாமியின் மூத்த சகோதரர் ஆவார். தேவகௌடாவின் பேரனும், ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வெல் ரேவண்ணா, ஹாசன் தொகுதி எம்பி-யாக உள்ளார். நடப்பு மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் களம் காண்கிறார்.



ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல், ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஹெச்.டி. ரேவண்ணா மீதும் பாலியல் அத்துமீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பிரஜ்வல் எடுத்த வீடியோக்கள் கடந்த வாரம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஹெச்.டி. ரேவண்ணா மீதும் பாலியல் அத்துமீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



இந்த வீடியோக்களில் இருந்த பெண் ஒருவரின் மகன், காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் வீடியோ வெளியானவுடன் தனது தாயார் காணாமல் போய் விட்டதாகவும், ரேவண்ணாவும் அவரது உதவியாளரும் அவரை கடத்தியதாகவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ரேவண்ணா மீதும், அவரது உதவியாளர் மீதும் பணத்திற்காக கடத்துதல், காயப்படுத்தும் எண்ணத்தோடு கடத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.



பெங்களூருவின் கே.ஆர். நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த முதல் தகவல் அறிக்கையில் ரேவண்ணா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரேவண்ணா தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றும் நேற்று தள்ளுபடி செய்தது.



இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் தேவகவுடா இல்லத்தில் வைத்து ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்தனர். ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படும் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமின் மனுவையும் பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, மைசூருவில் காணாமல் போன பாதிக்கப்பட்ட பெண்மணியை காலேனஹல்லி கிராமத்தில் ரேவண்ணாவின் உதவியாளர் ராஜசேகருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் மீட்டனர்.



இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதனை தொடர்ந்து ஹெ.டி. ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடுகளில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சோதனை நடத்தினர்



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை