Skip to main content

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

May 02, 2024 95 views Posted By : YarlSri TV
Image

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார். 

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.



சென்னை, அடையாறு பகுதியில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டுவந்நிலையில் அவரது இல்லத்திலேயே நேற்று (01) இரவு 9.30 மணியளவில் காலமானார்.



 



கடந்த 1980ஆம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்…" என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் அறிமுகமானார் உமா ரமணன். 



அந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தீபன் சக்ரவர்த்தியுடன் இணைந்து அந்தப் பாடலை பாடியிருந்தார்.



 



கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தோடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் இவர் பின்னணி பாடலுக்கு பாடியுள்ளார்



 



எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட வெகு சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினாலும் பெரும்பாலும் இளையராஜா இசையில் தான் அதிக பாடல்கள் பாடியுள்ளார். அவரது இசையில் மட்டும் கிட்டத்தட்ட 100 பாடல்களை பாடியுள்ளார்.



 



சினிமா தவிர்த்து கணவர் ரமணனுடன் இணைந்து ஆயிரணக்கணக்கான மேடை பாடல்கள் பாடியுள்ளார். இவரது கணவர் ஏவி ரமணனும் இசை துறையை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



 



உமா ரமணனின் மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று (02) நடைபெறவுள்ளது. உமா ரமணனின் மறைவுக்கு இசை ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை