Skip to main content

மோசமடைந்துள்ள காற்றின் தரம் - இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

Mar 06, 2024 20 views Posted By : YarlSri TV
Image

மோசமடைந்துள்ள காற்றின் தரம் - இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை! 

 நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.



 இன்று  கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.



இந்த நிலை உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகின்றது 



மேலும், காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகி இருக்கின்றது .



அத்துடன் நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50ஐத் தாண்டியிருப்பதால், மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இது குறித்து கவனம் செலுத்துமாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை