Skip to main content

200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை...!

Mar 06, 2024 31 views Posted By : YarlSri TV
Image

200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை...!  

நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



பாராளுமன்றதில்  உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில்  அமைச்சர் இதனை தெரிவித்தார்.



மேல் மாகாணத்தில் இந்த நவவீண வசதியுடன் கூடிய 200 மின்சார பஸ்களை போக்குவரத்து சேவைக்கு உட்படுத்துவேன். 



 தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 பஸ்களை சேவையில் உட்படுத்துவதாகவும் அமைச்சர்  பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்



இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து 2017 ஆம் ஆண்டு முதல் பொது போக்குவரத்திற்காக இ-டிக்கெட் முறையை அறிமுகம் செய்ய முயற்சித்த போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை 



ஆனால் இந்த இ-டிக்கெட் திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.எனவும் அமைச்சர் குறிப்பிட்டார் 



இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களத்தினால் நடத்தப்படும் பொது போக்குவரத்திற்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை