Skip to main content

இன்றைய வானிலை பற்றிய முன்னறிவிப்பு..!

Mar 06, 2024 23 views Posted By : YarlSri TV
Image

இன்றைய வானிலை பற்றிய முன்னறிவிப்பு..! 

நாட்டின் இன்றைய தினம் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி,புத்தளம் மற்றும் மட்டக்களப்பு   மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 



இதேவேளை, தென் மாகாணத்தின் சில இடங்களிலும்  இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடும் எனவும். 



நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான  வானிலை நிலவக்கூடும். 



மேலும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டமான  காலநிலை காணப்படும். 



கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையில் இருந்து வடகிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும். 



நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படுவதோடு சீரான வானிலை காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை