Skip to main content

மின்கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!

Mar 05, 2024 24 views Posted By : YarlSri TV
Image

மின்கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..! 

சமய வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.



அத்துடன் அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தினாலும், பொதுவான கட்டணம் 23 சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 



 நேற்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும்  பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



நேற்று இடம்பெற்ற பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கூட்டத்தின் போது, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



இதற்கமைய, 30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.



அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 28 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 30 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 



91 முதல் 180 வரையான அலகுகளுக்கு 24 சதவீதமும், 180க்கு மேற்பட்ட அலகுகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை