Skip to main content

இலங்கை மக்களை அச்சுறுத்தும் கடும் வெப்பம் :மக்களுக்கு அவசர எச்சரிக்கை...!

Mar 03, 2024 11 views Posted By : YarlSri TV
Image

இலங்கை மக்களை அச்சுறுத்தும் கடும் வெப்பம் :மக்களுக்கு அவசர எச்சரிக்கை...! 

அதிகளவு  வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் அறிவித்துள்ளனர். 



அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது என ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் போஷாக்கு நிபுணர் வைத்தியர் ஜானக மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். 



 வடமேல், மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என  எச்சரித்துள்ளார்.



வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வெப்ப சுட்டெண் ஆலோசனை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பணியிடங்களில் பணிபுரிபவர்கள் அதிக நீரை அருந்துதல், அடிக்கடி நிழலில் ஓய்வெடுத்தல், நீரேற்றத்துடன் இருத்தல் முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 



 முதியோர்கள் மற்றும் சிறுவர்களை அவதானத்துடன் பாதுகாத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் நீரேற்றமாக இருக்க முன்னுரிமை கொடுக்குமாறும், வெள்ளை அல்லது வெளிர் நிறங்களில் இலகுரக ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை