Skip to main content

2,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை!

Mar 01, 2024 19 views Posted By : YarlSri TV
Image

2,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை!  

மேல் மாகாணத்தில்  காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் வகையில்  2,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர்  நியமனங்கள் வழங்க தீர்மானம் .



கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தக் குழு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொக்குவிதான தெரிவித்தார். 



 ஆரம்பக்கல்வி, கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகள் மற்றும் பொதுக் கல்விப் பாடங்களை கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக செயலாளர் தெரிவித்துள்ளார் 



 மேல் மாகாணத்தில் இன்னும் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை