பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் திடீர் வீழ்ச்சி!
Feb 28, 2024 16 views Posted By : YarlSri TV
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் திடீர் வீழ்ச்சி!
பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அவற்றின் விற்பனையில் பாரிய சரிவு ஏற்ப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பாண் விற்பனை 25% ஆகவும் கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை பேக்கரிகளுக்கு வழங்கப்படாமை, ஒரு கிலோ மாஜரின் விலை 1000 ரூபாவாகவும் பட்டர் கிலோ 3000 ரூபாவாகவும் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவாகவும் அதிகரித்தமையால் உற்பத்திச் செலவு பெருமளவு அதிகரிப்பதால், பேக்கரிப் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது.
இந்த விலை உயர்வினாலேயே பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கம் பேக்கரி பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து முட்டையின் விலையை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago