Skip to main content

மிக வேகமாக குறைந்து வரும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்...!

Feb 19, 2024 35 views Posted By : YarlSri TV
Image

மிக வேகமாக குறைந்து வரும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்...! 

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து வெப்பமான காலநிலை நிலவி வருவதால் நீர் ஏந்து பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. 



மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 14 அடி குறைந்து 106 நீர் சேமிப்பில் உள்ளது என கென்யோன் நீர் மின் நிலைய அதிகாரி கூறியுள்ளார். 



காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் எட்டு அடி குறைந்துள்ளது.



கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, நவலக்சபான, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட வெகுவாக குறைந்து வருவதாகவும். 



இவ்வாறு வெப்பமான காலநிலை தோன்றுவதால் மேலும் நீர் மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை