Skip to main content

சிறுவர்கள் முன் போதைப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம்..!

Feb 18, 2024 55 views Posted By : YarlSri TV
Image

சிறுவர்கள் முன் போதைப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம்..!  

சிறுவர்களை போதைப்பொருட்களில் இருந்து  பாதுகாப்பதில் சமூகம் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது என சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.



 சிறுவர்கள் முன்னிலையில் மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை  சிறுவர்கள் முன்னிலையில் உட்கொள்ளக் கூடாது எனவும், 



போதைப் பொருட்களை சிறுவர்களின் பார்வையில் வைக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .



குருநாகலை – மாதுராகொட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் போதைமாத்திரையை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு பதிலளிக்கும் போதே சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை குறிப்பிடுள்ளார் .



 ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்துவைத்த சில போதை மாத்திரைகளை பாடசாலைக்கு கொண்டுசென்றதுடன் ஏனைய மூன்று மாணவர்களுடன் இதனை உட்கொண்டுள்ளனர்.



இந்தநிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு குறித்த 4 மாணவர்களும் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சிறுவனின் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



சந்தேகநபர் நேற்று (17) குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை