Skip to main content

விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பெத்தும் நிஸ்ஸங்க!

Feb 15, 2024 39 views Posted By : YarlSri TV
Image

விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பெத்தும் நிஸ்ஸங்க! 

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, புதிய சாதனையொன்றை படைத்துள்ளார் 



ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி சார்பில் அதிவேகமாக இரண்டாயிரம் ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் பெத்தும் நிஸங்க முதலிடத்தை பதிவு செய்துள்ளார்.



25 வயதான இவர், 52 இன்னிங்சுகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். ஆனால், விராட் கோஹ்லி 53 இன்னிங்சுகளிலேயே இரண்டாயிரம் ஓட்டங்களை எடுத்திருந்தார். 



 இலங்கை அணி சார்பில், உபுல் தரங்க 63 இன்னிங்சுகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது அந்த சாதனையை  நிஸ்ஸங்க பெற்றுள்ளார் .



எனினும், இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் சுப்மான் கில் 38 இன்னிங்சுகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்ததே ஒட்டுமொத்த சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை