அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் வெளியான முக்கிய அறிவிப்பு..!
Feb 15, 2024 44 views Posted By : YarlSri TV
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் வெளியான முக்கிய அறிவிப்பு..!
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை இன்று (15) முதல் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள்ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கஅறிவித்துள்ளார்
ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும்
இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிக்கையில்
"விண்ணப்பங்களை விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் ஒன்லைன் முறையின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலதிகமாக, பிரதேச செயலகங்களில் உள்ள சிறப்பு பிரிவுகளுக்கும் வழங்கலாம்.
ஒரு மாதத்திற்கு விண்ணப்பங்களை கோருவோம். முதல் சுற்றில், 20 லட்சம் விண்ணப்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும்.
இரண்டாம் சுற்றில் அதனை 24 லட்சம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு ஜூலை மாதம் தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
மொத்தத்தில், இந்த ஆண்டு நலத்திட்டங்களுக்கு அரசாங்கம் 205 பில்லியன் ரூபாய் செலவழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago