Skip to main content

பரீட்சைகள் பிற்போடப்படும் அபாயம்! கல்வி அமைச்சு அறிவிப்பு!

Feb 04, 2024 40 views Posted By : YarlSri TV
Image

பரீட்சைகள் பிற்போடப்படும் அபாயம்! கல்வி அமைச்சு அறிவிப்பு! 

உயர்தர விடைத்தாள் பரீட்சை தாமதமானால் இவ்வருடம் நடைபெறவுள்ள அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடும் அபாயம் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார் 



தற்போதைய கல்வி அமைப்பை சீர்குலைக்கும் ஒரு சிறிய சம்பவம் கூட பாடசாலை அமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 



இவ்வாறான செயற்பாடுகளினால் பரீட்சை காலம் மாத்திரமன்றி பாடசாலைகளின் முழு செயற்பாடுகளும் தடைபடுவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



இம்முறை வழங்கப்பட்ட நாளாந்த கொடுப்பனவு தொடர்பில் நிலவும் பிரச்சினையின் அடிப்படையிலேயே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



 கடந்த ஆண்டைப் போலவே, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை எவ்வித பிரச்சினையும் இன்றி வழங்கப்படும் என கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை