Skip to main content

உள்ளுராட்சி நிறுவனங்களின் 8 ஆயிரத்து 400 பணியாளர்களுக்கு அரச நியமனம்.

Nov 03, 2023 27 views Posted By : YarlSri TV
Image

உள்ளுராட்சி நிறுவனங்களின் 8 ஆயிரத்து 400 பணியாளர்களுக்கு அரச நியமனம். 

அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன்  உள்ளுராட்சி நிறுவனங்களில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 8 ஆயிரத்து 400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கையில், 



மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய, சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு 9 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். 



குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை