Skip to main content

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய நிதி அமைச்சர்..!

Nov 03, 2023 30 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய நிதி அமைச்சர்..! 

 



பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமனை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.



நவம்பர் முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்திய அமைச்சருடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.



இதன்போது யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை பார்வையிட்டார். இதன்போது யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.



நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு செல்லவுள்ளதுடன் யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையின் (SBI) திறப்பு விழாவும் இடம்பெறவுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை