Skip to main content

மருத்துவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

Nov 03, 2023 27 views Posted By : YarlSri TV
Image

மருத்துவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 



வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(03)காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த போராட்டம் நாளை(04)காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.



வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் மற்றும் மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் மட்டுமே இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே!, முறையற்ற வரி சம்பள வெட்டு வைத்தியர்களை துரத்தாதே, அடிப்படை மருந்து உபகரணங்களை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியபடி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பொன்றை முன்னெடுத்தனர்.



பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம்.



இருப்பினும் இதுவரை எந்தவிதமான சாதகமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உரிய தரப்பினால் மேற்கொள்ளப்படாத நிலையில் நாம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்அறிவித்துள்ளனர்.



அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை