Skip to main content

இந்திய மாணவனுக்கு அமெரிக்காவில் கத்திக் குத்து

Nov 02, 2023 32 views Posted By : YarlSri TV
Image

இந்திய மாணவனுக்கு அமெரிக்காவில் கத்திக் குத்து 

இந்தியாவின் தெலங்கானா மாகாணத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அமெரிக்காவில் கத்திக்குத்து நிகழ்ந்துள்ளது.



அமெரிக்காவின் வால்பரைசோ நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் தெலங்கானாவைச் சோ்ந்த வருண் ராஜ் (24) என்ற இளைஞரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். 



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,அமெரிக்காவில் கணினி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வரும் வருண் ராஜ் (24) என்ற இளைஞரை வால்பரைசோ நகரத்தில் உள்ள பொது உடற்பயிற்சி நிலையத்தில் ஆண்ட்ரேட் (24) என்ற இளைஞா் கத்தியால் குத்தினாா். அதில் பலத்த காயமடைந்த அவா், அருகில் உள்ள ஃபோா்ட் வைன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவா் உயிா் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை