Skip to main content

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அபார வெற்றி!...

Nov 02, 2023 37 views Posted By : YarlSri TV
Image

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அபார வெற்றி!... 

பாகிஸ்தான் அணி 32 வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.



ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடியது.



இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான தன்ஜித் ஹசின் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த ஷாண்டோ 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்களிலும் வந்த வேகத்தில் வெளியேறினர்.



இதையடுத்து லிட்டன் தாஸ் – மஹ்மதுல்லா கூட்டணி நிதானமாக விளையாடி, சீரான இடைவெளியில் இருவரும் ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். இந்த கூட்டணி 79 ரன்களை சேர்க்க, வங்கதேச அணி 100 ரன்களை கடந்தது. 45 ரன்கள் சேர்த்து இருந்தபோது இஃப்திகார் அஹ்மது பந்துவீச்சில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மஹ்மதுல்லா அரைசதம் கடந்தார். 70 பந்துகளில் 56 ரன்களை சேர்த்த அவர், ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.



இதையடுத்து வந்த ஹிரிதாய் 7 ரன்களில் வெளியேறினார். அதேநேரம், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், 43 ரன்கள் அடித்து ஹரிஸ் ராஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து, மெஹிதி ஹாசன் 25 ரன்களிலும், டஸ்கின் அஹ்மத் 6 ரன்களிலும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.



இதன் காரணமாக, 45.1 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை சேர்த்தது.



இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷபீக் மற்றும் ஃபகார் ஜமான் களமிறங்கினர்.



இருவரும் தங்களது பேட்டால் வங்கதேசதின் பந்தை அடித்து நொறுங்கினர். இவர்களின் கூட்டணியை பிரிக்க வங்கதேச வீரர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமலேயே போனது.



ஒரு பக்கம் அப்துல்லா ஷபீக் பௌண்டரிசாக அடிக்க மறுபக்கம் ஃபகார் ஜமான் சிக்சர்களாக அடித்து வங்கதேச அணியை மிரளவைத்தார்.



இறுதியாக இந்தக் கூட்டணி 21 வது ஓவரில் முடிவுக்கு வந்தது. 21 வது ஓவரில் அப்துல்லா ஷபீக் 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர் என மொத்தமாக 69 பந்துகளில் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.



பின்னர் களமிறங்கிய பாபர் ஆசாம் 16 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த 2 ஓவரிலேயே சிறப்பாக விளையாடி வந்த ஃபகார் ஜமான் 7 சிக்சர்கள் மற்றும் 3 பௌண்டரீஸ் என மொத்தமாக 74 பந்துகளில் 81 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.



இவரைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.



இதில் முகமது ரிஸ்வான் 4 பௌண்டரீஸ் அடித்து 21 பந்துகளில் 26 ரன்களையும், இப்திகார் அகமது 2 பௌண்டரீஸ் அடித்து 15 பந்துகளில் 17 ரன்களையும் எடுத்தனர்.



இதனால் பாகிஸ்தான் அணி 32 வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.



பாகிஸ்தான் அணியின் 3 விக்கெட்களையும் வங்கதேச அணியின் மெஹிதி ஹசன் மட்டுமே எடுத்தார். மற்ற வீரர்கள் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.



மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 74 பந்தில் 81 ரன்களை எடுத்த ஃபகார் ஜமான்னுக்கு வழங்கப்பட்டது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை