Skip to main content

நியூசிலாந்து பந்தை தெறிக்கவிட்ட தென் ஆப்பிரிக்கா !...

Nov 02, 2023 37 views Posted By : YarlSri TV
Image

நியூசிலாந்து பந்தை தெறிக்கவிட்ட தென் ஆப்பிரிக்கா !... 

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறுகிறது.



இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.



அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா களமிறங்கினர்.



இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 8 வது தேம்பா பாவுமா 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 28 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.



அடுத்ததாக ரஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கினார். குயின்டன் டி காக் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டுசென் சிறப்பாக செய்யப்பட்டு நியூசிலாந்து அணியின் பந்துகளை பறக்கவிட்டனர்.



இருவரும் பேட்டிங் தெறிக்கவிட்டனர் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இவர்களின் கூட்டணியை எவ்வளவு முயற்சி செய்து பிரிக்க முடியாமல் போனது. பின்னர் 40 வது ஓவரில் 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 116 பந்துகளில் 114 ரன்களுக்கு குயின்டன் டி காக் ஆட்டமிழந்தார்.



பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் தனது பங்குக்கு நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை தெறிக்கவிட்டார். 47 வது ஓவரில் 9 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 118 பந்துகளில் 133 ரன்களை எடுத்து ரஸ்ஸி வான் ஆட்டமிழந்தார்.



பின்னர் சிறப்பாகா விளையாடி வந்த டேவிட் மில்லர் 49.5 ஓவரில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பௌண்டரீஸ் என அடித்து 30 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி ஒரு பந்து இருக்கும் நிலையில் களமிறங்கிய ஐடன் மார்க்ராம் கடைசி பந்தில் சிக்சர் அடித்து 600 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளார்.



இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்துள்ளது.



நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 2 விக்கெட்களும், நீசம் மற்றும் ட்ரெண்ட் போல்ட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதனால் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற 358 ரன்கள் இலக்காக உள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை