Skip to main content

இங்கிலாந்து அணி கீரோன் பொல்லார்ட்டுக்கு வழங்கிய வாய்ப்பு!

Dec 26, 2023 25 views Posted By : YarlSri TV
Image

இங்கிலாந்து அணி கீரோன் பொல்லார்ட்டுக்கு வழங்கிய வாய்ப்பு! 

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியின் பயிற்சிக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கீரோன் பொல்லார்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



பொல்லார்ட் டி20 உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராக செயல்படுவார்.



டி20 கிரிக்கெட் மற்றும் அதன் தன்மை குறித்து பொல்லார்ட் நீண்ட அனுபவம் கொண்டுள்ளதால் அவரை துணை பயிற்சியாளராக இலங்கிலாந்து கிரிக்கெட் தேர்வுக்குழு நியமித்துள்ளது.



அதன் பிரகாரம் விரைவில் அவர் இங்கிலாந்து அணியுடன் இணைந்துக்கொள்ள உள்ளார்.



மேற்கிந்தியத் தீவுகளின் 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட போது அதில் பிரதான பங்காளராக பொல்லார்ட் இருந்தார் மற்றும் 600 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய டி20 போட்டிகளில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

7 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை