Skip to main content

சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதல் முறையாக ஒரே நாளில் 1,00,969 பேர் தரிசனம்..!

Dec 25, 2023 18 views Posted By : YarlSri TV
Image

சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதல் முறையாக ஒரே நாளில் 1,00,969 பேர் தரிசனம்..! 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜை காலத்தில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 1,00,969 பேர் தரிசனம் செய்தனர். சபரிமலையில் பக்தர்கள் சுமார் 15 மணிநேரம் காத்திருந்து பதினெட்டு படிகளேறி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.



சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் வெள்ளம் போல திரண்டிருந்தது. அப்பாச்சி மேடு முதல் சன்னிதானம் வரை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் பக்தர்கள் காத்திருந்து 18 படிகளேறி தரிசனம் செய்தனர். சபரிமலையில் நேற்று மட்டும் 1,00,969 தரிசனம் செய்தார். நடப்பு மண்டல பூஜை காலத்தில் முதல் முறையாக 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஐயப்பன் தரிசனத்துக்காக பக்தர்கள் 15 மணிநேரம் வரை காத்திருந்தனர்.



புல்மேடு பாதை:



 பம்பை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால், புல்மேடு பாதை வழியாக சன்னிதானம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புல்மேடு பாதை வழியாக சன்னிதானத்துக்கு நேற்று 5,798 பேர் தரிசனத்துக்காக வந்தடைந்தனர்.



 



சபரிமலையில் இருந்து தரிசனம் முடிந்துவிட்டு தமிழ்நாடு பக்தர்கள் பேருந்து நிலக்கல் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை