Skip to main content

இந்தியே தேசிய மொழி; திமுகவை மீண்டும் சீண்டும் நிதிஷ் கட்சி!

Dec 25, 2023 27 views Posted By : YarlSri TV
Image

இந்தியே தேசிய மொழி; திமுகவை மீண்டும் சீண்டும் நிதிஷ் கட்சி! 

இந்தி மொழிதான் இந்தியாவின் தேசிய மொழி; திமுக எம்பி தயாநிதி மாறன் இந்தி மொழி பேசுகிறவர்கள் குறித்து இழிவாக பேசினால் நாங்களும் கடுமையாக விமர்சிப்போம் என "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், திமுகவை கடுமையாக எச்சரித்துள்ளது.



"இந்தியா" கூட்டணியில் திமுக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. டெல்லியில் இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் டிசம்பர் 19-ந் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தியில் பேசினார். அப்போது திமுகவின் எம்பி டிஆர் பாலு, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வலியுறுத்தினார்.



 இதனால் கடுப்பாகிப் போன நிதிஷ்குமார், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி. ஆங்கிலேயர்கள் போன போதே நாட்டை விட்டு ஆங்கிலமும் போய்விட்டது; இந்தியை அனைவரும் கற்றுக் கொள்ளுங்கள் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலுவை நோக்கி கடும் குரலில் கூறியது பெரும் சர்ச்சையானது.



இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தி மொழியை கற்பதால் எந்த பயனும் இல்லை; உ.பி, பீகார் மாநிலத்தில் இந்தி மொழி கற்றவர்கள் கூட தமிழ்நாட்டில் கட்டிட வேலை, கழிவறையை சுத்தம் செய்கிற வேலையை செய்கிறார்கள் என திமுக எம்பி தயாநிதி மாறன் பேசிய பேச்சை மீண்டும் பகிர்ந்து பாஜக பிரச்சனையை கிளப்பியது. பாஜகவைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த வேண்டும் என்பதற்காக இத்தகைய பழைய பேச்சுகளை புதிய பேச்சுகளாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறது



. ஆனால் தயாநிதி மாறன் பேசியது 4 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை புரிந்து கொள்ளாமல் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூவும் தற்போது தயாநிதி மாறன் எம்பிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.



 ஜேடியூ மூத்த தலைவர் கேசி தியாகி கூறுகையில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி. மகாத்மா காந்தி கூட, நாடு விடுதலைக்குப் பின் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என விரும்பினார். தயாநிதி மாறனின் அருவறுக்கத்தக்க, இழிவான விமர்சனங்களுக்கு நாங்களும் கடுமையாக பதிலடி தருவோம். தயாநிதி மாறன் போன்றவர்களின் பேச்சுகள் பாஜகவுக்குதான் பலன் தரும் என்றார்.





 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை