Skip to main content

இந்திய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு:

Dec 25, 2023 36 views Posted By : YarlSri TV
Image

இந்திய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு: 

இந்தியாவில் இருந்து தைவானுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்த ஆண்டின் (2023) இறுதிக்குள் கையெழுத்திடப்பட வேண்டுமென இந்தியா மற்றும் தைவான் திட்டமிட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக தைவான் ஊடகங்களில் இந்த ஒப்பந்தம் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.



தைவான் அரசுடன் இணைந்த மத்திய செய்தி நிறுவனம் (Central News Agency- சிஎன்ஏ) டிசம்பர் 10ஆம் தேதியன்று, ஒரு அநாமதேய ஆதாரத்தை மேற்கோள் காட்டி, இரு தரப்பும் 2020ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது எனவும் கூறியது.



தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் மருத்துவமனைகளில் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க தைவான் ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தப் போவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை கூறியது.



இந்த ஒப்பந்தம் பற்றிய செய்திகள் தைவானில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை