Skip to main content

காங்கிரஸைவெற்றியை நோக்கிஅழைத்துச் செல்லும் திறன் ராகுல் காந்திக்கு இல்லையா?

Dec 25, 2023 39 views Posted By : YarlSri TV
Image

காங்கிரஸைவெற்றியை நோக்கிஅழைத்துச் செல்லும் திறன் ராகுல் காந்திக்கு இல்லையா? 

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா'வின் இதுவரையிலான நகர்வுகளும் காங்கிரசுக்கு சவால்களை அதிகப்படுத்தியுள்ளன.



இந்தத் தோல்வி அக்கட்சியின் மன உறுதியைக் குலைத்துள்ளதாகவும், இதன் காரணமாக ‘இந்தியா’ கூட்டணியில் கூட அக்கட்சி வலுவான நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



 



இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும்அதன்மீது பதிந்துள்ளது.



எனவே, காங்கிரஸ் மீண்டும் தன்னை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.





காங்கிரஸ் பெரியளவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை செய்துள்ளது. ராகுல் காந்திக்கு சவால்கள் அதிகரித்து வரும்நிலையில், உத்தர பிரதேசத்தின் பொறுப்பில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.



 



அவருக்கு இன்னும் பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் பொதுச் செயலாளராக சச்சின் பைலட் நியமிக்கப்பட்டுள்ளார்.



அசோக் கெலாட் தேசியக் கூட்டணிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவராக புதிய முகத்தை அக்கட்சியினர் தேடி வருவதாகத் தெரிகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை