Skip to main content

அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு: ஜனவரி 2 முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை...!

Dec 23, 2023 20 views Posted By : YarlSri TV
Image

அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு: ஜனவரி 2 முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை...! 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பணியாற்றி வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.



எம்.பி,. ஏம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளையும், முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை எடுத்த வழக்குகளையும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளார்.





சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் நீதிபதிகள் மாற்றப்படுவர்.



அதேபோல நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் வழக்குகளும் மாற்றப்படும்.



கடந்த செப்டம்பர் மாதம் வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி,. ஏம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார்.



ஊழல் வழக்குகளிலிருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே,கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஓபிஎஸ் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.



அக்டோபர் மாதத்துக்கு பின் இந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார்.



இந்த பின்னணியில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பணியாற்றி வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 2ஆம் தேதி முதல் எம்.பி,. ஏம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை