Skip to main content

எல்.ஐ.சி’ தலைப்புக்கு எதிர்ப்பு: தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Dec 16, 2023 29 views Posted By : YarlSri TV
Image

எல்.ஐ.சி’ தலைப்புக்கு எதிர்ப்பு: தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் 

எல்.ஐ.சி படத் தலைப்பைப் பயன்படுத்த, இயக்குநரும் இசை அமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “இந்ததலைப்பை 2015-ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் சார்பில் பதிவு செய்துள்ளேன். இதை அறிந்த விக்னேஷ் சிவன், தன் படத்துக்கு அந்தப் பெயரை தரக்கோரி  . தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். 



ஆனால் என் படத்தின் கதைக்கு அது முக்கியம் என்பதால் மறுத்து விட்டேன். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்துக்கு வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயல். இது முழுக்க முழுக்க அதிகாரத்தன்மை கொண்டது.



 இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். தொடர்ந்து அவர் அந்த தலைப்பைப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று.  இயக்குநரும் இசை அமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

24 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை