Skip to main content

தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு!

Dec 15, 2023 22 views Posted By : YarlSri TV
Image

தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு! 

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேயடியாக சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.



அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை