Skip to main content

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்குக்கு! காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம்.

Dec 13, 2023 24 views Posted By : YarlSri TV
Image

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்குக்கு! காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம். 

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலக நாடுகளின் வலுவான ஆதரவோடு காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நடைபெற்றுள்ளது.



193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டன.



அமெரிக்கா, இஸ்ரேல், ஒஸ்திரியா, குவாத்தமாலா, லைபீரியா, மைக்ரோனேஷியா, நவ்ரு, பப்புவா நியூ கினியா, பராகுவே ஆகிய 10 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக  வாக்களித்துள்ளன.



இதேநேரம் குறித்த வாக்கெடுப்பில் 23 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதோடு போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் வெற்றிபெற்றதை அடுத்து தூதுவர்கள் கைதட்டி ஆரவாரமும் செய்திருந்தனர்.



இந்நிலையில் அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டதின் கீழ் தமது கடமைகளுக்கு இணங்க வேண்டுமெனும் பொதுச்சபையின் கோரிக்கைக்கையை இந்த தீர்மானம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை