Skip to main content

நேற்று ஏற்பட்ட திடீர் மின்தடை!

Dec 10, 2023 29 views Posted By : YarlSri TV
Image

நேற்று ஏற்பட்ட திடீர் மின்தடை! 

நாட்டில் நேற்று திடீரென ஏற்பட்ட மின்தடை தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (10) விசேட அறிக்கையொன்றை வெளியிடத் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.



இதனடிப்படையில், விசேட செய்தியாளர் மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதேவேளை, உத்தேச மின்சார சட்டமூலம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார்.



இது எதிர்வரும் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. எவ்வாறாயினும், வர்த்தமானி சட்டமூலத்தில் 42 தட்டச்சுப் பிழைகளை அமைச்சு கண்டறிந்துள்ளதாக அவர் கூறினார்.



இந்த பிழைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.



இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.



அத்துடன், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு உடனடியாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க அண்மையில் விடுத்த அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.



இந்த வருடத்திற்கான செலவீனம் 720 பில்லியன் ரூபா என கணிப்பது சரியானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மேலும், இந்த வருடத்திற்கான செலவு 575 பில்லியன் ரூபாவாக இருக்கும் என அவர் கணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



ஒரு யூனிட் மின்சாரம் 50 ரூபாவாக செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமையால் சபைக்கு பாரிய இலாபம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் மின்சார சட்டமூல சபையின் செலவு 540 பில்லியன் ரூபாவாகும்.



இந்த மாதம் மேலும் 38 பில்லியன் ரூபாய்கள் சேர்க்கப்படும்.



மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது தனது மதிப்பீட்டில் கவனம் செலுத்தியிருந்தால் மக்களும் பொருளாதாரமும் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் ஜனக ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை