Skip to main content

ஹாசாவில் போர் நிறுத்தம்...?

Nov 10, 2023 37 views Posted By : YarlSri TV
Image

ஹாசாவில் போர் நிறுத்தம்...? 

ஹாசாவில் 3 நாட்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போர் நிறுத்தப்பட வேண்டும் என  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்தும்  வலியுறுத்தி  வருகின்றன.



இந்த நிலையில், வடக்கு காசாவிலிருந்து பாலஸ்தீனிய மக்கள் வெளியேறும் வகையில் தினசரி நான்கு மணித்தியாலங்கள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவிக்கிறது.



காசாவிற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பிலும், ஹமாஸிடம் உள்ள  பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை அடுத்து அதற்கு மாற்றீடாக காசாவில் 3 நாட்களுக்கு மட்டும் போரை நிறுத்தி வைக்க அமெரிக்கா, கட்டார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.



மேலும் , பாரிஸில் மேற்கு மற்றும் அரபு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, அரசு சாரா அமைப்புகள் ஒன்றிணைந்து காசாவிற்கு எவ்வாறு எந்த வகையான உதவிகளை வழங்குவது என்பன குறித்து ஆலோசனை செய்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை