Skip to main content

ஆஸ்திரேலியா அதிரடி வெற்றி!...

Nov 08, 2023 35 views Posted By : YarlSri TV
Image

ஆஸ்திரேலியா அதிரடி வெற்றி!... 

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றுக்கு வருகிறது. உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்குள் நுழையப்போகும் அணிகள் யார் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.



இந்நிலையில் நேற்றையப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றது.



இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.



இதில் ரஹ்மானுல்லா 8 வது ஓவர் முடிய 25 பந்துகளுக்கு 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரஹ்மத் ஷா களமிறங்கினார்.



இப்ராஹிம் மற்றும் ரஹ்மத் ஷா சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொண்டே வந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 24 வது ஓவரில் ரஹ்மத் ஷா 44 பந்துகளில் 30 ஓவர்களுக்கு ஆட்டமிழந்தார்.



இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 37 வது ஓவரில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஷீத் கான் 3 சிக்சர் மற்றும் 2 பௌண்டரீஸ் என மொத்தமாக 35 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.



அதேபோல் தொடக்க வீரராக களமிறங்கிய இப்ராஹிம் சத்ரான் அட்டகாசமாக விளையாடி 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 129 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.



இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்துள்ளது.



ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டும், மிட்சல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் சம்பா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.



இதனால் ஆஸ்திரேலியா அணி 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர்.



இதில் 1 ஓவர் முடிய டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடித்ததாக களமிறங்கிய மிட்சேல் மார்ஷ் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடக்க வீரர்களை களமிறங்கிய டேவிட் வார்னர் 8 வது ஓவர் முடிய 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.



பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 19 வது ஓவரில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 91 / 7 ஆகா இருந்தது. ஆஸ்திரேலியா அணி வெற்றிப் பெற வாய்ப்பே இல்லை என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கினார்.



ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி வந்த கிளென் மேக்ஸ்வெல் LBW முறையில் நடுவரால் அவுட் என அறிவிக்கப்பட்டார். ஆனால் அவுட் என ஏற்றுக்கொள்ளாத மேக்ஸ்வெல் டிஆர்எஸ் எடுத்தார்.



அதில் அவுட் இல்லை என தெரிந்ததும் மேக்ஸ்வெல் பௌண்டரிசாக அடிக்க ஆரம்பித்துவிட்டார். பின்பு அவர் அடித்த ஒரு பந்து முஜீப் கைக்கு சென்றது. ஆனால் அந்த கேட்சை கோட்டைவிட்டுவிட்டார் முஜீப்.



அப்போது ஆரம்பித்த அவரின் அதிரடி ஆட்டம் ஆப்கானிஸ்தான் அணியை கண்கலங்க வைத்தது. அதிரடியாக பௌண்டரி, சிக்சர் என அடித்து சதம் அடித்தார் மேக்ஸ்வெல்.



அத்தோடு அவரின் ஆட்டம் நிற்கவில்லை மேலும் அதிரடியாக விளையாடி 145 ரன்கள் எடுத்த போது காலில் அடிபட்டு ஓடமுடியாமல் தவிர்த்துக் கொண்டிருந்த மேக்ஸ்வெல் ரிட்டையர் ஹுர்ட் மூலம் வெளியேறுவார் என்ற ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்து கொண்டிருந்த வேலையில் அவர் மீண்டும் களத்தில் இறங்கினார்.



இறுதியாக மேக்ஸ்வெல் 21 பௌண்டரீஸ் மற்றும் 10 சிக்சர்கள் என மொத்தமாக 128 பந்தில் 201 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் இவர் சதம் அடிக்க பக்கபலமாய் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் நிதானமாக ஆட்டமிழக்காமல் ஆடிவந்தார்.



இதனால் ஆஸ்திரேலியா அணி 47 வது ஓவரில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்து அதிரடியாக வெற்றிப் பெற்றது.



ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.



இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது இரட்டை சதம் அடித்த மேக்ஸ்வெல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை