Skip to main content

இலங்கையில் தரமற்ற டீசல் விநியோகம்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Nov 07, 2023 47 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் தரமற்ற டீசல் விநியோகம்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்! 

சந்தையில் தரமற்ற டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் தற்போது கையிருப்பில்  உள்ள டீசல் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் டீசல் தரமற்றது என கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அந்த டீசல்  நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படும்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.



சுயாதீன விசாரணை குழு மற்றும்  லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும், டீசல் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும்  அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



இதே வேளை, நவம்பர் 5 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கு வந்த 40,000 மெற்றிக் தொன் டீசல்  தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாகவும் , கொலன்னாவை பகுதியில் குறித்த  டீசல் விநியோகம் செய்யப்படுவதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை