Skip to main content

முரசொலி மாறன் படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

Aug 17, 2023 66 views Posted By : YarlSri TV
Image

முரசொலி மாறன் படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை! 

கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று. முரசொலி மாறன் புகழ் போற்றுவோம். அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:- நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் 90-வது பிறந்தநாள் இன்று. மதுரை சிலைமானில் தலைவர் கலைஞரால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று. முரசொலி மாறன் புகழ் போற்றுவோம். அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை