Skip to main content

திரிபோஷாவில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுத் தன்மை இல்லை – திரிபோஷா நிறுவனம்!

Sep 23, 2022 65 views Posted By : YarlSri TV
Image

திரிபோஷாவில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுத் தன்மை இல்லை – திரிபோஷா நிறுவனம்! 

நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அஃப்லாடாக்சின் இரசாயனம் இல்லை என ஸ்ரீலங்கா திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.



திரிபோஷாவின் தரம் குறித்து எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம் என்றும் திரிபோஷா உட்கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.



திரிபோஷாவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.



தாய்மார்கள் மத்தியில் அச்சத்தை பரப்புவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதை இது என்றும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் உணவுப் பற்றாக்குறை சூழ்நிலையில் இதுபோன்ற போலியான அறிக்கைகள் தாய்மார்களின் மனநிலையை குலைத்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



திரிபோஷா பொதியில் திருப்தியடைந்த தாய்மார்கள் உள்ளனர் என்றும் எனவே திரிபோஷா உண்ணுவதற்கு அச்சப்பட வேண்டாம் என தாய்மார்களிடம்  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



திரிபோஷா தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவாக மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை