Skip to main content

யாழ். நவாலி பகுதியில் இளைஞன் மீது சரமாரி வாள் வெட்டு!

Sep 19, 2022 59 views Posted By : YarlSri TV
Image

யாழ். நவாலி பகுதியில் இளைஞன் மீது சரமாரி வாள் வெட்டு! 

யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



கோண்டாவில் கிழக்கை சேர்ந்த துசாளன் எனும் 18 வயதுடைய இளைஞன் மீதே வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு நேற்று  இரவு சென்று விட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை நவாலி சம்பந்தப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை குழு வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளது.



தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வன்முறை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக வீதியில் ஓடிய போதிலும் துரத்தி துரத்தி சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு வன்முறை கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.



தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை