Skip to main content

சீனாவில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம்!

Sep 17, 2022 65 views Posted By : YarlSri TV
Image

சீனாவில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம்! 

சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.



வெளிநாட்டில் இருந்து சீனாவின் சோங்கிங் நகரத்திற்கு சென்ற நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.



குறித்த நபர் உட்பட சில பயணிகள் விமான நிலையம் வந்ததும் கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.



அப்போது அவருக்கு உடலில் தோல் அரிப்பு போன்ற பாதிப்பு உண்டானது. பின் அந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.



சோங்கிங் நகருக்கு வந்தவுடன் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டதால் வைரஸ் பரவும் ஆபத்து குறைவாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.



குரங்கு அம்மை சுமார் 90 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.



இந்த குரங்கு அம்மை நோயை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனவும் உலக சுகாதார அவசரநிலையாகவும் கருத்திற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை