Skip to main content

உடல் எடையை குறைக்க உதவுகிறதா நாட்டு சர்க்கரை..?

Oct 14, 2022 70 views Posted By : YarlSri TV
Image

உடல் எடையை குறைக்க உதவுகிறதா நாட்டு சர்க்கரை..? 

நாட்டுச் சர்க்கரை இயற்கையான நிறம் மற்றும் மணத்துடன் கிடைப்பதால் அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நமக்கு முழுவதுமாக கிடைக்கின்றன. நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும்.



நாட்டு சர்க்கரையில் பல சத்துகள் உள்ளன. இவற்றில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜின்க், செலினியம், இரும்புசத்து போன்ற சத்துக்கள் நாட்டு சர்க்கரையில் நிறைந்துள்ளன.



வைட்டமின் பி6 நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்ற சருமத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் நாட்டுச் சர்க்கரையில் அடங்கியுள்ளன. இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும்இ இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது.



நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தி சருமத்தை ஸ்க்ரப் செய்வது, இறந்த செல்கள், சரும துளைகள் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் தூசுக்களை அகற்றி, பளபளப்பான சருமத்தை பெற உதவும்.



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம். இதில் குறைந்த அளவில் கலோரிகள் உள்ளதால் உடல் எடை குறைய உதவுகிறது.



வெள்ளை சர்க்கரையில் உள்ள சில வேதிப்பொருள்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து நீரிழிவு நோயை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாது.

 


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை