Skip to main content

அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை - உயர் நீதிமன்றம்!

Sep 26, 2022 73 views Posted By : YarlSri TV
Image

அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை - உயர் நீதிமன்றம்! 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.



தாக்குதல்கள் தொடர்பாக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கின் பிரதிவாதியாக பதவியில் இருக்கும் ஜனாதிபதியை பெயரிடாமுடியாது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.



இந்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை என தெரிவித்து தீர்ப்பை அறிவித்தது.



இதேவேளை இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேகநபராக பெயரிட்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை ஒக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக இம்மாதம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

3 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை