Skip to main content

பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Sep 24, 2022 76 views Posted By : YarlSri TV
Image

பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! 

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து  சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.



குறிப்பாக யாழ்ப்பாணத்திலையே அதிகளவான பிள்ளைகளை சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பெற்றோர் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



வடக்கில் 2021 ஆம் ஆண்டு 158 பிள்ளைகள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் அரையாண்டு கால பகுதிக்குள் 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இதேவேளை யாழ்.மாவட்டத்தில் 124 பேரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 45 பேரும் , மன்னார் மாவட்டத்தில் 07 பேரும் வவுனியா மாவட்டத்தில் 08 பேருமாக 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.



மேலும் பெற்றோரின் பொருளாதார நிலைமைகளை அறிந்து உண்மையில் அவர்களால் பிள்ளைகளை பராமரிக்க முடியாதா என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுவர் இல்லங்களில் பிள்ளைகளை சேர்க்க அனுமதிப்போம் எனவும் வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் இ.குருபரன் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை