Skip to main content

ஜப்பான் நிலநடுக்கம் - 20 லட்சம் வீடுகளில் மின்சேவை நிறுத்தம்

Mar 17, 2022 99 views Posted By : YarlSri TV
Image

ஜப்பான் நிலநடுக்கம் - 20 லட்சம் வீடுகளில் மின்சேவை நிறுத்தம் 

ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.



டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கி.மீ. தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து  சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 



இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் தற்போது அங்கு  20 லட்சம் வீடுகளில்  மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை