Skip to main content

சீனாவிடம் உதவிகளை கோரும் ரஸ்யா! தடுக்கும் அமெரிக்கா! சீனாவின் நிலைப்பாடு?

Mar 14, 2022 89 views Posted By : YarlSri TV
Image

சீனாவிடம் உதவிகளை கோரும் ரஸ்யா! தடுக்கும் அமெரிக்கா! சீனாவின் நிலைப்பாடு? 

ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



பைனான்சியல் டைம்ஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களின் செய்திகள் இதனை தெரிவித்துள்ளன.



உக்ரைனில் பயன்படுத்துவதற்காகவே இராணுவ உபகரணங்களை, மொஸ்கோ, பீஜிங்கிடம் இருந்து எதிர்பார்ப்பதாக இந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.



உக்ரைன் ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததில் இருந்து ரஸ்;யா, சீனாவிடம் உதவிகளை கோரி வருகிறது



எனினும் எந்தவகையான உதவிகளை ரஸ்யா கோரி வருகிறது என்பதை குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.



இந்தநிலையில் ரஸ்யாவின் கோரிக்கையை ஏற்று, சீனா உதவி செய்யத் தயாராகி வரலாம் என்ற அறிகுறிகள் தென்படுவதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.



தற்போது மேற்கத்தைய நாடுகளால் ரஸ்யா மீது விதிக்கப்பட்;டுள்ள பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தைத் தணிக்கவே சீனாவிடம் பொருளாதார உதவி கேட்கப்படுகிறது



ரஸ்ய - உக்ரைன் மோதலில் சீனா இதுவரை தன்னை நடுநிலை வகிப்பதாக சித்தரிக்க முற்படுகிறது.



அத்துடன்; படையெடுப்பை இதுவரை கண்டிக்கவில்லை. இதேவேளை இன்று திங்களன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரோமில் வைத்து சீன வெளியுறவுக் கொள்கை அதிகாரி யாங் ஜீச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதன்போது ரஸ்;யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை சீனா அல்லது வேறு எந்த நாடு;ம் ஈடுசெய்ய முடியாது என்பதை அமெரிக்கா உறுதி செய்யும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் குறிப்பிட்டுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை