Skip to main content

நான் 2 குழந்தைகளின் அப்பா! இப்படி செய்ய மாட்டேன்.. கொதிக்கிறார் செலன்ஸ்கி

Mar 12, 2022 84 views Posted By : YarlSri TV
Image

நான் 2 குழந்தைகளின் அப்பா! இப்படி செய்ய மாட்டேன்.. கொதிக்கிறார் செலன்ஸ்கி 

நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறேன். நான் எப்படி உயிரி ஆயுதம்(பயோவெப்பன்) தயாரிப்பேன்'' என ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமாக பதிலளித்துள்ளார்.



நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் உக்ரைன் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இருந்தன.



இதனால் உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு முதல் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தனது படைகளை குவித்தார். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் கடந்த மாதம் 24ல் உக்ரைன் மீது போர் நடவடிக்கையை மேற்கொண்டார். தற்போது 2 வாரங்களாகியும் போர் முடிவுக்கு வரவில்லை.



போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன்-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை அவ்வப்போது நடந்தாலும் இதுவரை தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கி அன்டிலியாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால் தொடர்ந்து போர் நடந்து வருகிறது.



இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறும்போது, " உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின்போது, கீவ் பகுதியில் அமெரிக்க நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்பட்ட ராணுவ உயிரி ஆயுதத் திட்டத்திற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.



இதற்கான ஆவணங்கள் உள்ளன. அமெரிக்கா, உக்ரைன் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்'' என கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா முற்றிலுமாக மறுத்தது. மேலும் ரஷ்யா முட்டாள் தனமாக குற்றம்சாட்டுகிறது. அதோடு, உக்ரைன் மீது ரஷ்யா உயிரி ஆயுத தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறியாக இதை பார்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.



இந்நிலையில் உக்ரைனில் ரசாயனம், உயிரி ஆயுதங்கள் அல்லது பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்று அந்நாட்டு அதிபர் விலாடிமிர் புதின் கூறியுள்ளார். இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உருக்கமாக பேசியதாவது.



பிரசாந்த கிஷோர் தனது டுவிட்டர் பதிவில் ‛சாகேப்' என பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும். நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‛‛5 மாநில தேர்தல் முடிவுகள் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம்.



2024 பாராளுமன்ற தேர்தல் முடிவு தற்போதைய உத்தர பிரதேச தேர்தல் முடிவுகளிலேயே தென்படுகிறது '' என கூறினார். இதை விமர்சிக்கும் வகையிலேயே பிரசாந்த் கிஷோர் இந்த பதிவை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



நான் உக்ரைனின் ஜனாதிபதியாகவும், இரண்டு குழந்தைகளின் தந்தையாகவும் இருக்கிறேன். எனது நாட்டில் அழிவை கொடுக்கும் வகையிலான ரசாயனம், உயிரி ஆயுதம் உள்பட பிற ஆயுதங்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இது உலகம் முழுவதற்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். இதுபோல் ரஷ்யா எங்களுக்கு எதிராக ஏதாவது செய்தால் அது மிகக் கடுமையான பொருளாதார தடைகளுக்கு வழிவகுக்கும்'' என்றார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை