Skip to main content

பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம்: தீர்ப்பு பாராளுமன்றத்திடம்

Mar 08, 2022 78 views Posted By : YarlSri TV
Image

பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம்: தீர்ப்பு பாராளுமன்றத்திடம் 

 பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம் தொடர்பான தமது தீர்ப்பை உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளது.



இந்த சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து பரிசீலித்து இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) பாராளுமன்ற சபையில் அறிவித்தார்.



உயர் நீதிமன்றத்தின் பொருட்கோடலுக்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது சரத்தானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அதனை சட்டத்திற்குள் உள்வாங்க முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.



எனினும், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின், குறித்த சரத்தை சாதாரன பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்.



சட்டமூலத்தின் நான்காவது சரத்தானது அமைச்சரினால் பாராளுமன்ற தெரிவுக்குழு கூடும் போது திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை