Skip to main content

நாட்டில் களைகட்டும் வெள்ளரிப்பழ வியாபாரம்!

Mar 08, 2022 100 views Posted By : YarlSri TV
Image

நாட்டில் களைகட்டும் வெள்ளரிப்பழ வியாபாரம்! 

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.



குறிப்பாக சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோக்களில் வெள்ளரிப் பழ வியாபாரிகளால் விற்பனை களை கட்டியுள்ளது.



வரட்சியான காலநிலை நிவுவதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப் பழ கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. தற்போது அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.



அத்துடன், 150 ரூபாய் முதல் சுமார் 350 ரூபாய் வரை வெள்ளரிப்பழம் பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.



வெள்ளரிப்பழங்கள் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன் இவைகள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.Gallery



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை