Skip to main content

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : ஏழு பேர் கைது.

Mar 06, 2022 67 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : ஏழு பேர் கைது. 

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த முயன்ற பல கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அக்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேகநபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டனர்.



தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள், ஏலக்காய், பீடி இலை, கஞ்சா போன்றவை கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.



இதனைத் தடுக்க கடலோர காவல் குழும பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார், தனிப்படை பொலிஸார் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.



இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி கடற்கரையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கியூ பிரிவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கடற்கரையில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்திக் கொண்டு செல்ல முயன்ற சுமார் 450 கிலோகிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.



இதன் மதிப்பு ரூ.2.5 கோடி எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் கணேசன் (49), முருகேசன் மகன் மாரிகுமார் (32), சிதம்பரத்தைச் சேர்ந்த ஜஹாங்கிர் பாதுஷா மகன் மன்சூர் அலி (37), தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பன்னீர்செல்வம் (42), தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலோன் காலனி கந்தசாமி மகன் யோகேஸ்வரன் (41), லூர்தம்மாள் புரம் முருகன் மகன் இசக்கி முத்து (40), மேல அழகாபுரி பெருமாள் மகன் வினீத் (25) ஆகிய 7பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், 9 கைப்பேசி, மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

4 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை