Skip to main content

ரஷ்யாவின் அடுத்த குறி எங்கள் மீது இருக்கலாம்? அச்சத்தில் இரு நாடுகளின் அதிரடி முடிவு

Mar 04, 2022 91 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யாவின் அடுத்த குறி எங்கள் மீது இருக்கலாம்? அச்சத்தில் இரு நாடுகளின் அதிரடி முடிவு 

ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள் சோவியத் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



உக்ரைன் நாட்டின் மீது 9-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதேவேளை ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. 



உக்ரைனை கைப்பற்றும் பட்சத்தில் தனது நாட்டின் எல்லையில் உள்ள பிற நாடுகளிலும் ரஷ்யா இதுபோன்ற படையெடுப்பை நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.



குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் சேராத முன்னாள் சோவியத் நாடுகள் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றன. 



ரஷ்யா எல்லையில் ஜார்ஜியா மற்றும் உக்ரைனின் எல்லையில் உள்ள மால்டோவா ஆகிய இரு முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.  இந்த நிலையில், ஜார்ஜியா மற்றும் மால்டோவா ஆகிய இரு முன்னாள் சோவியத் நாடுகளும் சேரும் பட்சத்தில் இந்த இரு நாடுகளுக்கும் ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை